ஆயுஷ் அமைச்சகமும், எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மருத்துவத் துறையை ஏற்டுத்தத் திட்டமிட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனையில், ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கொடேச்சா, மருத்துவமனையின் ஒருங்கிணைந்த மருத்துவ  ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிரத்தியேகமான துறை உருவாக்கப்படும் வரை ஆயுஷ் அமைச்சகம், ஒருங்கிணைந்த மருத்துவ  ஆராய்ச்சி மையத்திற்குத் தொடர்நது ஆதரவு அளிக்கும் என்று அமைச்சகத்தின் செயலாளர் உறுதியளித்தார்.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆயுர்வேதம், யோகா சார்ந்த ஒருங்கிணைத்த நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679321